சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்தில் ரூ.18 கோடி பறிமுதல்

Added : டிச 15, 2020
Share
Advertisement
ஈரோடு:ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனம், அவர்களுக்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக, வருமான வரி சோதனை நடந்தது. இதில், 18 கோடி ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.ஈரோடு, தங்கபெருமாள் வீதியில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இயக்குனர்களாக சீனிவாசன், சேகர், பூபதி உள்ளனர். கட்டுமான தொழிலுடன், பஸ் டிரான்ஸ்போர்ட்,

ஈரோடு:ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனம், அவர்களுக்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக, வருமான வரி சோதனை நடந்தது. இதில், 18 கோடி ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஈரோடு, தங்கபெருமாள் வீதியில், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இயக்குனர்களாக சீனிவாசன், சேகர், பூபதி உள்ளனர். கட்டுமான தொழிலுடன், பஸ் டிரான்ஸ்போர்ட், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடத்தப்படுகின்றன.

பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரி கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். கர்நாடகா மாநிலத்திலும், அரசு கட்டடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வரி ஏய்ப்பு புகாரின்படி, வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் காலை, பல்வேறு குழுக்களாக பிரிந்து, ஈரோட்டில் கட்டுமான நிறுவனம், இயக்குனர்களின் வீடு, அலுவலகங்கள் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடந்த சோதனையில், 14 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இயக்குனர்களிடம் விசாரணை நடந்தது. இரண்டாம் நாளாக 15 இடங்களிலும் வருமான வரி சோதனை தொடர்ந்தது.இதில், மேலும் கணக்கில் வராத, 4 கோடி ரூபாய், பல கோடி ரூபாய் மதிப்பில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சோதனை நடக்கும் இடங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதன் இயக்குனர்கள், அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளின் பினாமியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X