சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபச்சார தொழில் செய்த தி.மு.க., பிரமுகர் கைது

Added : டிச 15, 2020
Share
Advertisement
மதுரை:விபச்சார தொழிலில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மதுரை மாவட்டம், ஆத்திகுளம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சார தொழில் செய்து வருவதாக, விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலாவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வீட்டை கண்காணித்தனர்.அப்போது, 24 வயது இளைஞர் வீட்டிற்குள் சென்று, அரை மணி நேரத்திற்கு பின் வெளியே

மதுரை:விபச்சார தொழிலில் ஈடுபட்ட, தி.மு.க., பிரமுகர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம், ஆத்திகுளம் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து, விபச்சார தொழில் செய்து வருவதாக, விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலாவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வீட்டை கண்காணித்தனர்.அப்போது, 24 வயது இளைஞர் வீட்டிற்குள் சென்று, அரை மணி நேரத்திற்கு பின் வெளியே வந்தார்.அடுத்து, 15 நிமிடங்கள் கழித்து, மற்றொருவர் சென்று வந்தார். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.அரை மணி நேரத்திற்கு, 1,000 ரூபாய் வசூலிப்பதும் தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் வீட்டினுள் சோதனையிட முயன்றபோது, அவர்களை வழிமறித்த, தி.மு.க., கரை வேட்டி கட்டியிருந்த பூசமலை, 46 என்பவர்,'தி.மு.க., கிளை செயலராக உள்ளேன்' எனக் கூறி, போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார்.போலீசார் அசைந்து கொடுக்காததால், வீட்டின் கிரில் கேட்டை உள்பக்கமாக பூசமலை பூட்டிக் கொண்டார்.போலீசாரின் எச்சரிக்கையை, அவர் கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து, சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து, போலீசார் நுழைந்தனர்.

அங்கு, 30 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்கள்மற்றும் நான்கு புரோக்கர்கள் இருந்தனர். அனைவரையும் கைது செய்தனர். போலீசார் பூட்டை உடைத்து வருவதற்குள், ஆணுறைகள், சிம் கார்டு போன்றவற்றை கழிப்பறை தொட்டியில் போட்டு மூடினர்.போலீசார் அதை நோட்டமிட்டு, பூசமலையை எடுக்க சொன்னபோது, கையால், 'செப்டிக் டேங்கிற்குள்' தள்ளி ஆதாரங்களை அழித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இவர் மீது, ஏற்கனவே புதுார், கூடல்புதுார், தல்லாகுளம் பகுதிகளில், விபச்சார வழக்குகள் உள்ளன. இவர் அலங்காநல்லுார் அருகே முடுவார்பட்டியைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர். ஆனால், கிளை செயலர் என மிரட்டிஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X