கொரோனா இறப்பு இந்தியாவில் குறைந்தது - ஆனாலும் எச்சரிக்கை தேவை

Updated : டிச 15, 2020 | Added : டிச 15, 2020
Share
Advertisement
புது டில்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக மத்திய அரசு செவ்வாயன்று தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்தப்படியே உள்ளன. அதே வேளையில் இதற்கு மாறாக இந்தியாவில் இவ்வெண்ணிக்கை குறைந்து வருகிறது. இது திருப்தி அளிப்பதாக நிடி ஆயோக் சுகாதார

புது டில்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக மத்திய அரசு செவ்வாயன்று தெரிவித்தது.



latest tamil news



அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்புகள் அதிகரித்தப்படியே உள்ளன. அதே வேளையில் இதற்கு மாறாக இந்தியாவில் இவ்வெண்ணிக்கை குறைந்து வருகிறது. இது திருப்தி அளிப்பதாக நிடி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறினார். மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், “நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய இதுவரை 15.55 கோடிக்கும் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நோய் பாதிப்பு 6.37 ஆகக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் இறப்பவர்கள் விகிதம் உலகளவில் குறைவானது” என்றார்.


latest tamil news



தொற்று நோயின் நிலை குறித்து வி.கே.பால் மேலும் பேசியதாவது: கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தினசரி 22,000 ஆக குறைந்துவிட்டன. உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைகிறது. இது தற்போது 400-க்கும் கீழ் உள்ளது. ஒரு தேசமாக நாம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு தொற்றுப் பரவும் விகிதத்தை குறிக்கும் ஆர்0 எண்ணிக்கையும் ஒன்றுக்கு கீழே உள்ளது. அதற்காக இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்னும் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிலைமை எதிர்பாராத விதமாக அதிகரிக்கக்கூடும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X