தமிழ்நாடு

என்னமோ...ஏதோ! டின்... டின்' பாட்டில் சத்தம்கேட்டு விலங்குகள் ஓட்டம்

Updated : டிச 16, 2020 | Added : டிச 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பேரூர்:கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மானாவாரி சாகுபடி குறித்த செய்திக்காக, மலைக்கிராமங்களுக்கு சென்றிருந்தோம். முகாசிமங்கலத்தை கடந்த போது, ஒரு பகுதி விளைநிலத்தில் இருந்து, 'டின்... டின்...' என்ற ஓசை, தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.வித்தியாசமான ஒலியாக இருந்ததால், வண்டியை ஓரம் கட்டினோம். ஓசை வந்த திசையை நோக்கி நடையை கட்டினோம். விளைநிலங்களை சுற்றிலும் தொங்க
 என்னமோ...ஏதோ! டின்... டின்' பாட்டில் சத்தம்கேட்டு விலங்குகள் ஓட்டம்

பேரூர்:கோவை, மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மானாவாரி சாகுபடி குறித்த செய்திக்காக, மலைக்கிராமங்களுக்கு சென்றிருந்தோம். முகாசிமங்கலத்தை கடந்த போது, ஒரு பகுதி விளைநிலத்தில் இருந்து, 'டின்... டின்...' என்ற ஓசை, தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது.
வித்தியாசமான ஒலியாக இருந்ததால், வண்டியை ஓரம் கட்டினோம். ஓசை வந்த திசையை நோக்கி நடையை கட்டினோம். விளைநிலங்களை சுற்றிலும் தொங்க விடப்பட்டிருந்த, பீர் பாட்டில்களில் இருந்துதான் அந்த, 'டின்... டின்...' கேட்டுக்கொண்டிருந்தது.விசாரித்தபோது தான் தெரிந்தது, வன விலங்குகளை விரட்டுவதற்கான, வித்தியாசமான முயற்சி அது என்பது. அம்முயற்சிக்கு சொந்தமான முகாசிமங்கலத்தை சேர்ந்த விவசாயி சின்னத்துரையை, 42, தேடிப்பிடித்தோம்.
அவர் கூறியதாவது:வனவிலங்குகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. முழுமையான விளைச்சலை எடுக்க முடியவில்லை. மானாவாரி நிலங்களை நம்பி, பல ஆயிரங்களை செலவிட்டு சோலார் மின் வேலி, அகளி போன்ற கட்டமைப்புகளை உருவாக்க முடியாது.இரவு காவலுக்கு இருந்தால், உயிருக்கு உத்திரவாதம் இல்லை. பட்டாசு சப்தங்களுக்கு வனவிலங்குகள் அஞ்சுவதை மையமாக வைத்து, யோசித்தபோதுதான் இந்த ஐடியா வந்தது.அதற்காக, பீர் பாட்டில்களை சேகரித்து, அவற்றை நீண்ட குச்சிகளில் கட்டி தொங்க விட்டேன். அதில், சப்தம் வருவதற்காக, கயிற்றில் சிறிய இரும்பு நட்டுகளை சேர்த்து, பிளாஸ்டிக் கவர்களையும் கட்டினேன்.
காற்றுக்கு கவர்கள் அசையும் போது, இரும்பு நட்டுகள் பாட்டில்களில் பட்டு ஒலி எழுப்பும். பகல் நேரத்தை காட்டிலும், இரவில் அதிக ஓசை கேட்கும். இதை கட்டியது முதல், எந்தவொரு வனவிலங்குகளும் விளைநிலங்களுக்குள் வருவதில்லை.இவ்வாறு, சின்னத்துரை கூறினார்.சின்னத்துரையின் இந்த'பெரிய' ஐடியாவுக்கு, அப்படியொன்றும் செலவு இல்லை. ஆண்டாண்டு காலமாக வனவிலங்குகளால், அவஸ்தைப்படும் நம்ம ஊர் விவசாயிகள் முயற்சித்துப்பார்க்கலாமே!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
16-டிச-202006:41:55 IST Report Abuse
Bhaskaran பழைய அம்மா டேபிள் பேன் விசிற்றியும் ஓட்டை எவர்சில்வர்த்தட்டும் வைத்து பல இடங்களில் பறவைகளை விரட்டும் இந்த முறை பழமையானது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X