தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேளாண்மைத்துறை சார்பில், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் குறித்து வாகனம் மூலம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.கலெக்டர் ராஜாமணி பிரசாரத்தை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் பேரூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை, இக்கரைபோளுவாம்பட்டி, நரசீபுரம், தென்னமநல்லூர், தொண்டாமுத்தூர், வேடபட்டி மற்றும் வடவள்ளி கிராமங்களுக்கு சென்று, விவசாயிகளுக்கு திட்ட விளக்கவுரைகள் தெரிவிக்கப்பட்டன.வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர்கள் டாம் சைலேஷ், தமிழ்ச்செல்வி, தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE