கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஊடக செய்தி அடிப்படையில் நடவடிக்கை'

Added : டிச 16, 2020
Share
Advertisement
மதுரை:'மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க, அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.கடந்த, 4ல் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்த நரிக்குறவ சமுதாயப் பெண்ணை, தன் பாலியல்

மதுரை:'மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க, அரசு வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கடந்த, 4ல் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டில் இருந்த நரிக்குறவ சமுதாயப் பெண்ணை, தன் பாலியல் தேவைக்காக, உடன் அனுப்ப, தமிழக சிறப்புக் காவல்படை போலீஸ்காரர் ராமச்சந்திரன் போதையில் மிரட்டியுள்ளார்.இது, செய்தியாக வெளிவந்துள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ பரவியுள்ளது. இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வகையில், இந்நீதிமன்றம் தானாக முன்வந்து, பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுக்கிறது.

குற்றங்கள், விதிமீறல்கள் தொடர்பாக, நாளிதழ்கள், 'டிவி' சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானால், அதை அரசுத் தரப்பில் கண்காணித்து, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல, தமிழகஅரசு, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும். உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு: சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது, கடந்த, 4ல் வழக்குப் பதியப்பட்டது. அவரை கைது செய்து, கீழமை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதே நாளில், அவர் ஜாமினில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

காணொலியில் ஆஜரான தென்காசி எஸ்.பி., சுகுணா சிங்: சம்பந்தப்பட்ட போலீஸ்காரர், திருநெல்வேலி பட்டாலியனில் பணிபுரிந்தவர். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து உள்ளேன்.

நீதிபதிகள்: இந்நீதிமன்றம் தலையிட்ட பின்தான் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். தவறு செய்த போலீஸ்காரரை காப்பாற்றும் நோக்கில், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. குடிநீர், கழிவு நீர், குப்பை கழிவுகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக, நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின்றன. இதை உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, அரசுத் தரப்பில் தவறுகின்றனர். இதனால், மக்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்கின்றனர்.

மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்க, அரசுத் தரப்பில் வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். இதை நிறைவேற்றுவது குறித்து பதிலளிக்க, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, கல்வி, மின்வாரியம், வருவாய்த் துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

போலீஸ்காரர் மீது பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ், ஜாமினில் வெளிவர முடியாத வகையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், கைதான அதே நாளில், அவரை ஜாமினில் செல்ல, கீழமை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.அவருக்கு ஜாமின் அனுமதிக்கக் கூடாது என, அந்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தாரா, இல்லையா எனத் தெரியவில்லை.

வழக்கு ஆவணம் மற்றும் கீழமை நீதிமன்ற ஜாமின் உத்தரவு நகலை, அரசுத் தரப்பில் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும், 23க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X