சீர்திருத்த மைய குழந்தைகளுக்கு உதவி தொகை அளிக்க உத்தரவு

Added : டிச 16, 2020
Share
Advertisement
புதுடில்லி:நாடு முழுதும் சிறார் சீர்திருத்த மையங்களில் இருந்து பெற்றோருடன் இணைந்துள்ள குழந்தை களின் கல்விக்காக மாதத்துக்கு 2000 ரூபாய் வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.பாதுகாப்பு இல்லங்கள், சிறுவர் சீர்திருத்த மையங்கள், தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளின் நலன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில்

புதுடில்லி:நாடு முழுதும் சிறார் சீர்திருத்த மையங்களில் இருந்து பெற்றோருடன் இணைந்துள்ள குழந்தை களின் கல்விக்காக மாதத்துக்கு 2000 ரூபாய் வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

பாதுகாப்பு இல்லங்கள், சிறுவர் சீர்திருத்த மையங்கள், தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளின் நலன் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுதும் உள்ள பாதுகாப்பு இல்லங்கள் சிறார் சிறைகள் தத்தெடுப்பு மையங்களில் 2.27 லட்சம் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர்.கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் இதில் 1.45 லட்சம் குழந்தைகள் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற குழந்தைகளின் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் கல்விக்காக மாதத்துக்கு தலா 2000 ரூபாயை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும்.இதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் வாயிலாக செயல்படுத்த வேண்டும். அதை மாவட்ட சட்ட உதவி மையங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதைத்தவிர பாதுகாப்பு இல்லங்கள் சிறார் சிறைகளில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 'ஆன்லைன்' மூலமாக பாடங்கள் நடத்துவதற்கு ஆசிரியர்களை நியமிப்பது பாடபுத்தகம் உள்ளிட்டவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X