சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் இணைப்பு தர ரூ.2700 லஞ்சம் உதவி பொறியாளர் கைது

Added : டிச 16, 2020
Share
Advertisement
சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுாரில் சின்னபாண்டி 48, என்பவரின் வீட்டிற்கு மின் இணைப்பு தர ரூ. 2700 லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் பூமிநாதன் 51, கைது செய்யப்பட்டார்.சின்னமனுார் அருகே முத்துலாபுரம் பரமத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி. விவசாய கூலியான இவர் அரசு உதவி பெற்று கட்டும் வீட்டிற்கு மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். உதவி பொறியாளர் பூமிநாதன், மின்

சின்னமனுார்:தேனி மாவட்டம் சின்னமனுாரில் சின்னபாண்டி 48, என்பவரின் வீட்டிற்கு மின் இணைப்பு தர ரூ. 2700 லஞ்சம் வாங்கிய உதவிபொறியாளர் பூமிநாதன் 51, கைது செய்யப்பட்டார்.

சின்னமனுார் அருகே முத்துலாபுரம் பரமத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னபாண்டி. விவசாய கூலியான இவர் அரசு உதவி பெற்று கட்டும் வீட்டிற்கு மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். உதவி பொறியாளர் பூமிநாதன், மின் இணைப்பு வழங்க ரூ. 7 ஆயிரம் லஞ்சம் கேட்டு பின்னர் ரூ.3 ஆயிரமாக குறைத்துள்ளார்.

இதுகுறித்து சின்னப்பாண்டி தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.சத்தியசீலன் தலைமையில், தேனி இன்ஸ்பெக்டர் கீதா உள்ளிட்ட அலுவலர்கள், சின்னபாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூ. 2700 ஐ கொடுத்து உதவி பொறியாளரிடம் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படி அவரது அலுவலகத்தில் வைத்து பணத்தை தந்தபோது அதை வாங்கி எண்ணிக்கொண்டிருந்த உதவி பொறியாளர் பூமிநாதனை, டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவரது சொந்த ஊர் மதுரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X