அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை எதிர்க்காத முதல்வர் விவசாயி அல்ல வேடதாரி தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாய்ச்சல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
திண்டுக்கல்:மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்காத தமிழக முதல்வர் பழனிசாமி விவசாயி அல்ல, வேடதாரி' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., சார்பில்திண்டுக்கல் மாவட்ட 'தமிழகம் மீட்போம்' கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.இதில் அவர் பேசியதாவது: அமைச்சர் சீனிவாசன் 5 ஆண்டுகளில் திண்டுக்கல்லுக்கு செய்த ஒரே நன்மை, 'முன்னாள்

திண்டுக்கல்:மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்காத தமிழக முதல்வர் பழனிசாமி விவசாயி அல்ல, வேடதாரி' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க., சார்பில்திண்டுக்கல் மாவட்ட 'தமிழகம் மீட்போம்' கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடந்தது.இதில் அவர் பேசியதாவது:

அமைச்சர் சீனிவாசன் 5 ஆண்டுகளில் திண்டுக்கல்லுக்கு செய்த ஒரே நன்மை, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இட்லி சாப்பிட்டார் என நாங்கள் சொன்னது பொய்' என்ற உண்மையை சொன்னது மட்டும்தான்.சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக 2 முறை தீர்மானம் நிறைவேற்றியும், முதல்வர் பழனிசாமியால் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்க முடியவில்லை.

மத்திய அரசால் உதவித் தொகை ரத்து செய்யப்பட்டு பட்டியல் இன மாணவர்கள் பாதித்து உள்ளனர். இதனை முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை.தமிழக மாணவர் பாதிப்புசமஸ்கிருதம், ஹிந்தியை மத்திய அரசு திணிக்க பார்க்கிறது. மத்திய அரசு தேர்வுகள் ஹிந்தி பேசும் மாநிலத்தவருக்கு சாதகமாக உள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது இலவச மின்சாரம். அதனை புதிய மின்சாரத் திட்டத்தின் மூலம் பறிக்கும் நடவடிக்கையை மத்தியஅரசு எடுத்து வருகிறது.விவசாயி எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் பழனிசாமி, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் விவசாயி அல்ல வேடதாரி. விவசாயிகளுக்காக டிச.18ல் நாம் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம்.

பாரதியார் நினைவு நாளில் அவரை புகழ்ந்து பேசிய பிரதமருக்கு நன்றி. பாரதியார் கூறிய, 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்' என்பதன் அர்த்தம் தெரிந்து தான் பிரதமர் பேசுகிறாரா. நாட்டின் நிலைமை தெரியாமல் தான் அவர் பேசுகிறார்.


தி.மு.க., கடுமையாக எதிர்க்கும்

மத்திய அரசு தமிழ் மொழியை காக்க என்ன செய்தது. தமிழ் மொழிக்கு துரோகம் செய்தது. தி.மு.க., அமைத்த செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்கு நிதி தராமல் ஆய்வு பணிகளை மேற்கொள்ளாமல் பாழ்படுத்தி விட்டனர். அதனை தனியாக பிரித்து மைசூர் பல்கலையுடன் இணைக்க பார்க்கிறார்கள். இதனை தி.மு.க., கடுமையாக எதிர்க்கும். செம்மொழி நிறுவனத்தைக் காக்கும் உரிமை தமிழக முதல்வருக்கு இல்லையா.தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு துரோகம் எனும் முப்பெரும் கொள்கையை வைத்துள்ளார் பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X