அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரு நாள் வெடிக்கும் பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடுமா:சிவகாசி கலந்துரையாடலில் கமல் கேள்வி

Added : டிச 16, 2020
Share
Advertisement
சிவகாசி:'' சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்கெல்லாம் கையூட்டு வாங்கி விதி மீறுகின்றனர், ஒருநாள் வெடிக்கும் பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடுமா'' என கமல் பேசினார்.'சீரமைப்போம் தமிழகத்தை 'என்ற பெயரில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.சிவகாசியில்நடந்த பட்டாசு , தீப்பெட்டி தொழிலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல்

சிவகாசி:'' சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்கெல்லாம் கையூட்டு வாங்கி விதி மீறுகின்றனர், ஒருநாள் வெடிக்கும் பட்டாசால் சுற்றுச்சூழல் மாசுபட்டுவிடுமா'' என கமல் பேசினார்.

'சீரமைப்போம் தமிழகத்தை 'என்ற பெயரில் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.சிவகாசியில்நடந்த பட்டாசு , தீப்பெட்டி தொழிலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பட்டாசினால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பது உண்மைதான். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகள் உள்ளன. அங்கெல்லாம் கையூட்டு வாங்கி கொண்டு விதி மீறுகின்றனர்.

ஒருநாள் வெடிக்கின்ற பட்டாசால் மாசுபட்டுவிடுமா, பட்டாசுக்கு அனுமதி மறுக்கிறார்கள். இதற்கு மாற்று கொடுக்க வேண்டியது அரசின் கடமை.மாற்று திட்டம் கொண்டு வர வேண்டும். வேறு தொழில் கற்று கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். எங்களுக்கு மாற்று வழி தெரியும்.


சாவிக்கு சண்டை



எம்.ஜி.ஆர்., அனைவருக்கும் பொதுவானவர். இரட்டை இலை துளிர் விட்டு மரமாக மாறும் என நினைத்தார் எம்.ஜி.ஆர்., நான் சிறுவனாக இருக்கும் போது அறிவுரை மட்டுமல்ல நீச்சலும் கற்று கொடுத்தார். அவருடன் இணைந்த புகைப்படம் என்னிடம் நிறைய உள்ளது.நாங்கள்தான் சென்டர் உங்கள் கொள்கை என்னவென்று கேட்கிறார்கள்.

கொள்கையை கூறினால் மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள். எங்கள் பெயரே மய்யம். நாங்கள்தான் சென்டர். அவர்கள் கறை படிந்தவர்கள். இரண்டு வேட்டிகளிலும் ஒரே கரைதான். உற்று கவனித்தால் சற்று வித்தியாசம் தெரியும்.எங்களுக்கும் வேட்டி கட்ட தெரியும். ஆனால் கட்டினால் அவர்களுடன் சேர்த்து விடுவார்களே என பயமாக உள்ளது.ஜாதி, மதத்தால் இந்த தமிழகத்தை யார் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்.எங்களின் ஒரே நோக்கம் நேர்மை. நான் கும்பிடும் கோயில் நேர்மை. அதில் உற்சவர் நான்தான். நேர்மை என்னும் கோயிலில் நீங்களே தெய்வங்களாக இருக்க வேண்டும்.


குறைகளை தீர்ப்போம்

குடிநீரை உங்களின் உரிமையாக கொண்டு வருவதே என முக்கிய நோக்கம். எங்கள் வேட்பாளர்கள் பொதுமக்களிடம் நேரடியாக சென்று பிரச்னைகளை கேட்டு தீர்த்து வைப்பேன் என கையெழுத்து போட வேண்டும். அதில் கேரண்டியாக நான் கையெழுத்துடுகிறேன். செய்யா விட்டால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.பட்டாசு தொழிலாளர் பிரச்னையை நிச்சயாமாக தீர்த்து வைப்பேன். உங்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்வேன் .

உங்கள் குறைகளை கூறுங்கள், நாங்கள் ஏதாவது செய்து தீர்ப்போம். இவ்வாறு அவர் பேசினார். மாநில துணைத்தலைவர் மகேந்திரன், கவிஞர் சினேகன்,மாவட்ட செயலாளர்கள் காளிதாஸ் (மத்தி) பால்ராஜ்(மேற்கு) பாஸ்கரன் (கிழக்கு ) நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X