பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த கோர்ட்; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், ஒருங்கிணைந்த கோர்ட் அமையுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம், மங்கலம் ரோட்டில் கோர்ட் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியால், புதிய கட்டடம் கட்ட கடந்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, 5.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கோர்ட் கட்டும் பணி துவங்கியது. அனைத்து வசதிகளுடன், 2 தளங்களுடன் புதிய கோர்ட் கட்டடம்

பல்லடம்:பல்லடத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில், ஒருங்கிணைந்த கோர்ட் அமையுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பல்லடம், மங்கலம் ரோட்டில் கோர்ட் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியால், புதிய கட்டடம் கட்ட கடந்தாண்டு தீர்மானிக்கப்பட்டு, 5.50 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கோர்ட் கட்டும் பணி துவங்கியது. அனைத்து வசதிகளுடன், 2 தளங்களுடன் புதிய கோர்ட் கட்டடம் கட்டப்பட்டு, நிறைவடையும் தருவாயில் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'புதிய கோர்ட் வளாகத்தில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் ஏற்படுத்தினால், வழக்கு சார்ந்து, மக்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும்.பொது மக்கள், வக்கீல்கள் எளிதாக வந்து செல்ல முடியும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X