நூறடி ரோடு 8வது வீதியில் தாறுமாறான ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
மின் விபத்து அபாயம்ரங்கேகவுடர் வீதி, தாமஸ் வீதி திருப்பத்தில் வைக்கப்பட்டுள்ள, மின் பெட்டி சிதிலமடைந்துள்ளது. பாதசாரிகள் கை தவறி, இப்பெட்டியை தொட்டு, விபத்துக்குள்ளாகும் முன், பெட்டியை சீரமைக்க வேண்டும்.- அருள், தாமஸ் வீதிசாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, வரதராஜூலு நகர், நான்காவது வீதி சந்திப்பில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு


மின் விபத்து அபாயம்ரங்கேகவுடர் வீதி, தாமஸ் வீதி திருப்பத்தில் வைக்கப்பட்டுள்ள, மின் பெட்டி சிதிலமடைந்துள்ளது. பாதசாரிகள் கை தவறி, இப்பெட்டியை தொட்டு, விபத்துக்குள்ளாகும் முன், பெட்டியை சீரமைக்க வேண்டும்.- அருள், தாமஸ் வீதி

சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 40வது வார்டுக்கு உட்பட்ட, கணபதி, வரதராஜூலு நகர், நான்காவது வீதி சந்திப்பில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு நீர் தேங்கியுள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மருதாசலம், கணபதி.

சாலையை செப்பனிடணும்மாநகராட்சி, 96வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம், முதலியார் வீதி - 3ல், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும்.- காளிமுத்து, முதலியார் வீதி.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 98 வது வார்டுக்கு உட்பட்ட, சுந்தராபுரம், காந்தி நகரில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 3) கடந்த சில மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ராமராஜ், காந்தி நகர்.

குழியால் அவதிபோத்தனுார், முத்தையா நகர் பிரதான சாலையில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, பணி முடிந்ததும், முழுமையாக மூடப்படவில்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- கருப்புசாமி, போத்தனுார்.

நேரு நகரில் குப்பை தொட்டி இல்லைகணபதி, நேரு நகர் ஐந்தாவது வீதியில், குப்பை தொட்டி இல்லாததால், சாலையோரம் குப்பை குவிக்கப்படுகிறது. இக்குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- சிவரஞ்சித், நேரு நகர்.

நாய் தொல்லைசங்கனுார் - நல்லாம்பாளையம் ரோடு, லட்சுமி நகரில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது; மக்கள் அச்சப்படுகின்றனர்.- சரண்யா, லட்சுமி நகர்.

போக்குவரத்து நெரிசல்பேரூர், படித்துறை அருகில் உள்ள, தரைப்பாலத்தில் பார்க் செய்யப்படும் வாகனங்களால், மக்கள் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- சக்திவேல், பேரூர்.

தெருவிளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, தெலுங்குபாளையம், ராஜேஸ்வரி நகரில் உள்ள, மின் கம்பத்தில் (எண்: 275), கடந்த இரு மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ராஜசேகர், ராஜேஸ்வரி நகர்.

சாக்கடை கால்வாயை துார் வாரணும்கணபதி, லட்சுமிபுரத்தில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்குகிறது; கொசு உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இக்கால்வாயை துார்வார வேண்டும்.- சுப்ரமணியன், கணபதி.

பூங்கா அருகில் துர்நாற்றம்ராமநாதபுரம், ஒலம்பஸ், ஆறுமுகம் நகர் பகுதி பூங்கா பின்புறம், சாலையோரம் குவிக்கப்படும் குப்பை, நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- சுரேந்திரன் ஒலம்பஸ்.

சாலையோரம் குப்பை குவியல்டாக்டர் பாலசுந்தரம் ரோடு, ஏ.டி.டி.காலனியில், சாலையோரம் குவிந்துள்ள குப்பை அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது.- பன்னீர்செல்வம், ஏ.டி.டி.காலனி.

மின் கம்பத்தை மாற்றணும்செல்வபுரம், எல்.ஐ.சி., காலனி, ஆப்பிள் ட்ரீ கிட்ஸ் பள்ளி அருகில் உள்ள, மின் கம்பத்தின்(எண்: 14) கீழ் பகுதி, சிதிலமடைந்துள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள, இக்கம்பத்தை அகற்ற வேண்டும்.- குமரன், எல்.ஐ.சி., காலனி.

குப்பை தொட்டி வேண்டும்வெள்ளக்கிணறு, சவுடாம்பிகா நகரில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டி சிதிலமடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது.- கிருஷ்ணன், சவுடாம்பிகா நகர்.

போக்குவரத்துக்கு இடையூறுகாந்திபுரம், நுாறடி ரோடு, எட்டாவது வீதியில், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-ரமேஷ், காந்திபுரம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X