இடையூறாக 'டிரான்ஸ்பார்மர்'வெள்ளகோவிலிலிருந்து, -முத்துார் -ஈரோடு செல்லும் ரோட்டோரம் டிரான்ஸ்பார்மர் உள்ளது. ரோடு அகலமாக இருந்தும், 'டிரான்ஸ்பார்மர்' குறுக்கிடுவதால், போக்குரவத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், அவசர பயணத்தின் போது தாமதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் புலம்புகின்றனர். அத்துடன், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. சம்மநதப்பட்ட துறையினர் டிரான்ஸ்பார்மரை, ரோட்டோரம் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தி.மு.க., வினர் மீது வழக்கு'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற நிகழ்ச்சி, திருப்பூர் தி.மு.க.,வினர் சார்பில், குமரன் சிலை அருகே நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாக கூறி, திருப்பூர் வடக்கு போலீசார், நுாற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.சாலை சீரமைக்க மனுதிருப்பூர் மாநகர காங்., சார்பில், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமாரிடம் மனு அளித்த மனு:அவிநாசி ரோடு, பி.என்., ரோடு, கொங்கு மெயின் ரோடு, காங்கயம் ரோடு, மங்கலம் ரோடு மற்றும் திருப்பூரின் மையப்பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். கொரோனா குறைந்து வரும் நிலையில், பெரும்பாலான பகுதியில் தேங்கியுள்ள சுகாதாரக்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது. பாதாள சாக்கடை பணி வேகமெடுக்காமல் உள்ளது. புதிய குடிநீர் குழாய் பணிகளை நேரில் ஆய்வு செய்து வேகப்படுத்த வேண்டும்.நிர்வாகிகள் பொது கூட்டம்அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் சார்பில், மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பொது கூட்டம் பல்லடம், கரையான்புதுாரில் நடந்தது. நிறுவன தலைவர் மூர்த்தி பங்கேற்று பேசினார். மாநில பொது செயலாளர் ராமசுப்பு, தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், மாநில அமைப்பு செயலாளர் மாரிராஜா உட்பட பலர் பங்கேற்றனர். வரும் சட்டசபை தேர்தலில், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம், நிறுவன தலைவருக்கு வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவிநாசி- அத்திக்கடவு குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தபால் அனுப்பும் போராட்டம்இறைச்சிக்காக, சட்டவிரோதமாக மாடு, எருமை, கன்று குட்டிகள் கடத்தி சென்று வெட்டப்படுவதை தடுக்கவும், குறைந்து விலைக்கு மாடுகளை வாங்கி, மாநிலம் விட்டு மாநிலம் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி வருகிறது. இக்கோரிக்கையை முன்வைத்து, அக்கட்சியினர், தலைமை தபால் நிலையத்தில் இருந்து மாநில கவர்னர், போலீஸ் உயரதிகாரிகள் என, பலருக்கு தபால் அனுப்பினர். மாநில துணை தலைவர் திருமுருக தினேஷ், மாவட்ட தலைவர் ரமேஷ், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகநாதன், மாநகர இளைஞரணி செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.தண்ணீர் கேட்டு மனுதிருமுருகன்பூண்டி, அம்மாபாளையத்தில் வசிக்கும் மக்கள், திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கிய மனுவில்,'குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், கடந்த, 35 நாளாக தண்ணீர் வரவில்லை. அடுத்துள்ள வீதிகளுக்கு சென்று மக்கள் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது. பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை,'எனக் கூறியிருந்தனர்.''குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு, சீராக தண்ணீர் வினியோகம் செய்யப்படும்,'' என செயல் அலுவலர் உறுதியளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE