பொங்கலுார்:'வரும் ஜன., 31ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது' என முடிவெடுக்கப்பட்டுள்ளது.அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பொங்கலுார் ஒன்றிய முன்னாள் தலைவர் சிவாச்சலம் முன்னிலை வகித்தார்.'தைப்பொங்கலை முன்னிட்டு, வரும் ஜனவரி, 31ல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது, விழாவுக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், கால்நடை, சுகாதாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரை அழைப்பது; இந்தாண்டு, 500 காளைகளை மட்டும் அனுமதிப்பது, 600 அடி பிரமாண்ட கேலரி அமைப்பது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியம், தமிழக ஜல்லிக்கட்டு பேரவை துணை செயலாளர் பவித்ரா, அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க துணை தலைவர் மூர்த்தி, ஆலோசகர் சண்முகம், இளைஞரணி தலைவர் தனபால், செயலாளர் கவுரிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE