வெள்ளகோவில்;வெள்ளகோவிலில், தனியார் ஆம்புலன்ஸ் சேவையில் உள்ள குறையை களைய, முடிவெடுக்கப்பட்டது.வெள்ளகோவில் நகராட்சி ஓலப்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில், 15க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் இயங்குகின்றன.ஏதேனும் ஒரு பகுதியில் விபத்து நேரிட்டால், நான்குக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள்'சைரன்' ஒலித்த படி செல்வதும், முந்தி செல்லும் ஆம்புலன்சில், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வந்த பின், பின்னோக்கி செல்லும் ஆம்புலன்ஸ்கள் காலியாக திரும்புவதும் தொடர்கிறது. இதனால், நேர மற்றும் பண விரயம் ஏற்படுகிறது; பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க கிளையை, வெள்ளகோவிலில் துவக்குவது என, ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.சங்க நிர்வாகிகள் கூறுகையில்,''பொதுவான ஓரிடத்தில் அனைத்து ஆம்புலன்ஸ்களையும் நிறுத்தி, அழைப்பின் அடிப்படையில், வரிசை முறையில் ஆம்புலன்ஸ் இயங்குவது என, முடிவெக்கப்பட்டுள்ளது. அனைத்து ஓட்டுநர்களும் கட்டாயம் சீருடை, அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும், குட்கா, பான்மசாலா பயன்படுத்தக் கூடாது.மது அருந்திய நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டக்கூடாது என்பது பல கட்டுப்பாடுகளை நடைமுறைக்க கொண்டுவர உள்ளோம். இதன் மூலம், மக்களுக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது நம்பிக்கை ஏற்படும்,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE