திருப்பூர்:ஊரையே சுத்தம் செய்யும், துாய்மை பணியாளர்கள் குடியிருக்கும் பகுதி, சுகாதாரக்கேடு நிறைந்து காணப்படுகிறது.திருப்பூர் மாநகராட்சி துாய்மை பணியாளர் குடியிருப்பு, பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பகுதியில் உள்ளது; 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வீடுகளின் பின்புறமுள்ள சிறிய வாய்க்கால் வழியாக வெளியேறி, பல்லடம் ரோட்டில் உள்ள பிரதான கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. ஆனால், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், வீடுகளின் முன் உள்ள நடைபாதையில் தேங்கி நிற்கிறது.வாய்க்கால் மீது, குடியிருப்பு கட்டப்பட்டதால் தான், தேங்கியுள்ள கழிவுநீரை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குடியிருப்போர் கூறுகை யில், 'பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட வடிகால் சிதிலமடைந்தும், அடைப்பு ஏற்பட்டும், கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது. மழைக்காலத்தில், வீடுகளுக்குள் கழிவு நீருடன் கலந்து மழைநீர் புகுந்து விடுகிறது. மாநகராட்சி நிர்வாகத்தினர் புதிய வடிகால் அமைக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE