கோவை:இன்று பனிப்பொழிவுடன் இணைந்து, மார்கழி மாதம் சில்லென பிறக்கிறது. கோவில்களில் மார்கழி உற்சவம், சமூக இடைவெளியுடன் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ் மாதங்களில் முக்கியமானது, தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மனிதனை உயர்வழிக்கு அழைத்துச்செல்லும் இம்மாதத்தில், இந்துக்கள் அதிகாலை எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.மார்கழி மாதம் என்பது தேவலோகத்தில் விடியற்காலை. அதனால் மார்கழியில் அதிகாலை எழுந்து நீராடி இறைவனை வணங்கினால், ஆரோக்கியத்துடன், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக தேவர்கள் ஆசிர்வதிப்பர் என்பது நம்பிக்கை.மார்கழியின் பெருமையை ஆண்டாள், 'மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...' என்று துவங்கும் திருப்பாவை பாசுரத்தில் விளக்குகிறார். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில், 'போற்றியாம் மார்கழி நீராடலோர்...' என்று பாடியுள்ளார்.அதன்படி, இன்று மார்கழி பிறப்பை ஒட்டி, கோவை நகரிலுள்ள கோவில்கள், அதிகாலை திறக்கப்படுகின்றன. திருப்பாவையும், திருவெம்பாவையும் பக்தர்களால் பாராயணம் செய்யப்படுகிறது. நாமசங்கீர்த்தனம், உச்சவிருத்தி பஜனை சில இடங்களில், சமூக இடைவெளியோடு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE