சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர்கள் தகராறு: போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர்;திருப்பூர், கருவம்பாளையத்தில், அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையிலான தகராறு காரணமாக, போக்குவரத்து பாதித்தது.திருப்பூர் நகரில், தினமும், 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயங்குகின்றன. போதிய ரோடு வசதி இல்லாதததால், வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. திருப்பூரில் இருந்து, குறுகிய தொலைவில் உள்ள ஊர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ்

திருப்பூர்;திருப்பூர், கருவம்பாளையத்தில், அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையிலான தகராறு காரணமாக, போக்குவரத்து பாதித்தது.திருப்பூர் நகரில், தினமும், 3 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இயங்குகின்றன. போதிய ரோடு வசதி இல்லாதததால், வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. திருப்பூரில் இருந்து, குறுகிய தொலைவில் உள்ள ஊர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பஸ் மட்டுமின்றி, மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.பயணிகளை ஏற்றி செல்வதில் அவ்வபோது தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று மாலை, மங்கலம் ரோடு, கருவம்பாளைத்தில் அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இடையே பயணிகளை ஏற்றிச் செல்வதில் தகராறு ஏற்பட்டது.பிற வாகனங்கள் செல்ல முடியாதவாறு ரோட்டை மறைத்து இரு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இரு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே காரசார விவாதம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, பஸ்சை இயக்க செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X