சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்து; 8 பேர் காயம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே, சாலை விபத்தில், எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.வெள்ளகோவில், சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் சின்னம்மாள், 65. கடந்த, 13ம் தேதி இறந்தார். 14ம் தேதி, அவரது உடல், நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை வாங்க, அவரது உறவினர்கள், 10 பேர் மின்மயானம் நோக்கி, செம்மண்டம்பாளையம் ரோட்டில், வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.இரவு, 8.30 மணியளவில்,

வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே, சாலை விபத்தில், எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.வெள்ளகோவில், சேனாபதிபாளையத்தை சேர்ந்தவர் சின்னம்மாள், 65. கடந்த, 13ம் தேதி இறந்தார். 14ம் தேதி, அவரது உடல், நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது அஸ்தியை வாங்க, அவரது உறவினர்கள், 10 பேர் மின்மயானம் நோக்கி, செம்மண்டம்பாளையம் ரோட்டில், வேனில் சென்றுக் கொண்டிருந்தனர்.இரவு, 8.30 மணியளவில், கணபதிபாளையம், பெரியசாமி தோட்டம் அருகே, தோட்டத்திலிருந்து தண்ணீர் லோடு ஏற்றி வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதியதில், 8 பேர் காயமடைந்தனர். வெள்ளகோவிலை சேர்ந்த பன்னீர்செல்வம், 60. தமிழரசி, 58 ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வேலுசாமி, 48, மகாலட்சுமி, 45, இருவரும் வெள்ளகோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரியா, 40, டிரைவர் கார்த்தி, 30, மதியழகன், 56, கோபாலகிருஷ்ணன், 16, ஆகியோர் சிறு காயமடைந்தனர்.வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர், தலைமறைவானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X