கோவை:பவுண்டரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு, குறு, சிறு நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.கோவை மாவட்டத்தில், 600க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் இயங்குகின்றன. இந்த வார்ப்பட தொழிலை சார்ந்து வெட் கிரைண்டர், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் போன்ற தொழில்கள் நடந்து வருகின்றன.'காஸ்டிங் மெட்டீரியல்'கள் பவுண்டரிகளில் இருந்து வாங்கப்பட்டு, குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றன.பவுண்டரி தொழிலுக்கு மூலப்பொருட்களான 'பிக் அயர்ன்' உள்ளிட்டவை, குறுகிய காலத்தில், 26 சதவீதத்துக்கும் அதிகமான விலை ஏற்றத்தை கொண்டுள்ளன. இதனால், விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி, இன்று முதல் கோவை மாவட்டத்தில், 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு ஆதரவு தெரிவித்து குறு, சிறு நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் இறங்குகின்றன.கோயம்புத்துார், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க(காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், ''குறு, சிறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும், பவுண்டரிகளில் 'காஸ்டிங் மெட்டீரியல்' வாங்கி பொருட்கள் தயாரிக்கின்றன. பவுண்டரிகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, குறு, சிறு நிறுவனங்களுக்கும் நெருக்கடி தருகிறது. ''எனவே, குறு, சிறு பவுண்டரி உரிமையாளர்கள் சங்கத்துக்கு, 'காட்மா' ஆதரவு தெரிவித்துள்ளது. நாளை(இன்று) ஒரு நாள், கோவை, திருப்பூரில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்துகின்றன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE