வெள்ளகோவில்:வெள்ளகோவில் அருகே, ஓலப்பாளையத்தில், நேற்று மாலை ஸ்பின்னிங் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.ஊத்துக்குளியை சேர்ந்தவர் தேவராஜ். 40. வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையத்தில், ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்.நேற்று மாலை, மில்லில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. தகவலறிந்த, வெள்ளகோவில் தீய ணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன் (போக்குவரத்து) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கும் என, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE