பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளிருப்பு போராட்டம்: தற்காலிக ஒத்திவைப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
போத்தனூர்,:கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் நியமனத்தை கண்டித்து நடக்கவிருந்த, உள்ளிருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.மாநில பா.ஜ., சிறுபான்மை பிரிவு பொது செயலாளராக இருப்பவர், மதுக்கரை, மரப்பாலத்தை சேர்ந்த ஜான்சன். இவர் நேற்று முன்தினம், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு தெற்கு மாவட்ட பா.ஜ.,வினரிடையே கடும் அதிருப்தி

போத்தனூர்,:கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் நியமனத்தை கண்டித்து நடக்கவிருந்த, உள்ளிருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.மாநில பா.ஜ., சிறுபான்மை பிரிவு பொது செயலாளராக இருப்பவர், மதுக்கரை, மரப்பாலத்தை சேர்ந்த ஜான்சன். இவர் நேற்று முன்தினம், கிணத்துக்கடவு சட்டசபை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு தெற்கு மாவட்ட பா.ஜ.,வினரிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை, ஈச்சனாரியிலுள்ள கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டம் நடத்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதற்காக, 50க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். இதனிடையே மாநில தலைமையிலிருந்து, இதுகுறித்து பேச, மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் நிர்வாகிகளுக்கு தகவல் தரப்பட்டது.நேற்று காலை அனைவரும் சேலம் புறப்பட்டு சென்றனர். இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X