பல்லடம்;பல்லடத்தில், ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிக்காக காத்திருந்த அனைத்து கட்சியினர், 'கலெக்டர் வராமல், பணியை துவங்க கூடாது' என, அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் இருந்து தருவிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுாகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.நேற்று காலை, 11:00 மணிக்கு கலெக்டர் விஜய கார்த்திகேயன் முன்னிலையில், ஓட்டுப்பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு, இயந்திரம் சரிபார்க்கும் பணி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, அனைத்து கட்சி நிர்வாகிகளும் வரவழைக்கப்பட்டனர். 'வேறு பணி காரணமாக, கலெக்டர் வர தாமதமாகும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.'கலெக்டர் வராமல் அறைக்கதவை திறக்க வேண்டாம்' என, அனைத்து கட்சியினரும் கூறினர். 30 நிமிட காத்திருப்புக்கு பின், கலெக்டர் வந்ததும் 'ஸ்டிராங் ரூம்' திறக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி துவங்கியது.ஆர்.டி.ஓ., ஜெகநாதன், மாவட்ட தேர்தல் பிரிவு தனி தாசில்தார் ரவீந்திரன், தாசில்தார்கள் தேவராஜ், சுந்தரம், முருகதாஸ் உட்பட வருவாய் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.சட்டசபை தேர்தலின் ஆரம்ப கட்ட நடவடிக் கையான ஓட்டுப்பதிவு இயந்திரம் சரி பார்ப்பு பணியின்போதே கட்சியினர்அளித்த நெருக்கடியால், அதிகாரிகள் திணறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE