பொது செய்தி

தமிழ்நாடு

கிசான் கார்டு இருந்தால்... குறைந்த வட்டியில் கடன்

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருப்பூர்:கிசான் கார்டு திட்டத்தில், கடனுதவி பெறலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் நலன் காக்க, 'கிசான் கிரெடிட் கார்டு' திட்டத்தில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. குறைந்த வட்டியில், எளிய தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இத்திட்டம், ஆடு, மாடு வளர்ப்போர், பால் உற்பத்தியாளருக்கும்

திருப்பூர்:கிசான் கார்டு திட்டத்தில், கடனுதவி பெறலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் நலன் காக்க, 'கிசான் கிரெடிட் கார்டு' திட்டத்தில், விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. குறைந்த வட்டியில், எளிய தவணையில் திருப்பி செலுத்தும் வகையில், கடன் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இத்திட்டம், ஆடு, மாடு வளர்ப்போர், பால் உற்பத்தியாளருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 'ஆவின்' நிறுவனம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) இணைந்து, பால் உற்பத்தியாளருக்கு, மூலதன கடன் வழங்க திட்டமிட்டுள்ளன. முதல்கட்டமாக, ஆவின் உறுப்பினராக உள்ள, 1,000 விவசாயிகளுக்கு, 3.16 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க திட்டமிடப்பட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கடன் வழங்கப்பட்டது.அதிகாரிககூறுகையில்,'கடனுக்கு, 4 சதவீத வட்டி வசூலிக்கப்படும். அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படும். அதிக கடன் பெறுவோருக்கு, பிணைய நிபந்தனையுடன் கடன் வழங்கப்படும். ஆடு, மாடு மற்றும் மீன் வளர்ப்போர், பால் உற்பத்தியாளர்கள், தங்களது தொழிலை மேம்படுத்த, கடன் அட்டை திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X