சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது: நகை, பணம் பறிமுதல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க, ரூரல் எஸ்.பி., அருளரசு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூர்ய ஜெகதீஸ், 27; கோட்டூர்
 திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது: நகை, பணம் பறிமுதல்

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க, ரூரல் எஸ்.பி., அருளரசு உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூர்ய ஜெகதீஸ், 27; கோட்டூர் மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த ரகுபதி, 34; மல்லீஸ்வரன், 31; பொங்காளியூரை சேர்ந்த சபரிநாதன், 24 ஆகியோரை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'பொள்ளாச்சி, கோவை சின்னியாம்பாளையம், தொட்டியம்பாளைம் உள்ளிட்ட பகுதிகளில், மொபட், ஒரு ஆம்னி கார் திருடியதும், நகை பறிப்பு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, ஐந்து லட்சத்து, 10 ஆயிரம் ரூபாய்; 13 சவரன் நகை மற்றும் இரு வாகனங்கள் என மொத்தம், 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குற்ற சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X