பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி சாகுபடி பாதிப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : டிச 16, 2020
Share
Advertisement
உடுமலை:தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கொத்தமல்லி, கொண்டைக்கடலை, மொச்சை சாகுபடிக்கு, பருவமழைக்கு முன் விதைப்பு செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டு, வழக்கத்தை விட,

உடுமலை:தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, பல ஆயிரம் ஏக்கரில், மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, கொத்தமல்லி, கொண்டைக்கடலை, மொச்சை சாகுபடிக்கு, பருவமழைக்கு முன் விதைப்பு செய்யப்பட்டது. ஆனால், நடப்பாண்டு, வழக்கத்தை விட, தொடர் மழையால், விளைநிலங்களில், அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால், முளை விட்ட, பயிர்கள் அனைத்தும், அழுகியது. வடிகால் வசதி இல்லாத பகுதிகளில், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விவசாயிகள் கூறுகையில், 'பாசன வசதி இல்லாத விளைநிலங்களில், மானாவாரி சாகுபடியே வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு, அதிக மழையால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும், விதைப்பு செய்தாலும், பருவம் தவறியுள்ளதால், போதிய மகசூல் கிடைக்காது. எனவே, பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், வேளாண் துறை வாயிலாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X