சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யானைக்கு காலில் காயம்: சிகிச்சைக்கு பின் கண்காணிப்பு

Added : டிச 16, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை அருகே, காலில் காயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், இயற்கை வளம் செழிப்பாக உள்ளது. இதனால், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் யானைகள் முகாமிட்டுள்ளன.இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லார் பிரிவு, இட்லியாறு சுற்று பட்டகிராம்பு காடு சரகத்தில், மூன்று
 யானைக்கு காலில் காயம்: சிகிச்சைக்கு பின் கண்காணிப்பு

வால்பாறை:வால்பாறை அருகே, காலில் காயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.வால்பாறையில் பருவமழைக்கு பின், இயற்கை வளம் செழிப்பாக உள்ளது. இதனால், தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில் யானைகள் முகாமிட்டுள்ளன.இந்நிலையில், மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லார் பிரிவு, இட்லியாறு சுற்று பட்டகிராம்பு காடு சரகத்தில், மூன்று வயதான ஆண் காட்டு யானைக்கு காலில் அடிப்பட்டது. இதனால், யானை நடக்க முடியாமல் தவிப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், வனவர் ஹேக்உம்மர், இயற்கை ஆர்வலர் ஆனந்த், கால்நடை மருத்துவர் மெய்யரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த யானைக்கு சிகிசை அளித்தனர்.வனத்துறையினர் கூறுகையில், காலில் அடிபட்ட யானைக்கு முதல் கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இரு நாட்களுக்கு பின், மீண்டும் சிகிச்சை அளிக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X