உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில், காய்கறி மற்றும் நீண்ட கால பயிரான தென்னை சாகுபடியிலும், பார்த்தீனியம் களைச்செடி பரவல், பல ஆண்டுகளாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.அனைத்து சீசன்களிலும், செழித்து வளரும் தன்மையுடைய, பார்த்தீனிய செடியின் விதைகள், காற்று மற்றும் நீரில் பரவும். சாகுபடி பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பதால், 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாய தொழிலாளர்களுக்கும் ஒவ்வாமை உட்பட பிரச்னைகள் ஏற்படுகிறது.தற்போது, கொத்தமல்லி, கொண்டைக்கடலை மற்றும் காய்கறி சாகுபடியிலும், இச்செடிகளால், விவசாயிகள் வெகுவாக பாதித்துள்ளனர்.சாகுபடி பயிர் இருப்பதே தெரியாத அளவுக்கு, பார்த்தீனியம் விளைநிலம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால், களையெடுத்தல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் உட்பட எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை.பிரதான பயிரின் வளர்ச்சி கூட தெரியாத அளவுக்கு களைச்செடி செழித்து வளர்ந்துள்ளது. பல ஆயிரம் ரூபாய் சாகுபடிக்காக செலவிட்டு, பார்த்தீனியத்தால், அனைத்தும் பாழாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE