பொது செய்தி

தமிழ்நாடு

இரு நாள் சிறப்பு முகாமில் 14,493 பேர் விண்ணப்பம்

Added : டிச 16, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் நடந்த இரண்டு நாட்கள் முகாமில், 14,943 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள, 269 ஓட்டுச்சாவடி மையங்களில், இரண்டாம் கட்ட

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் நடந்த இரண்டு நாட்கள் முகாமில், 14,943 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள, 269 ஓட்டுச்சாவடி மையங்களில், இரண்டாம் கட்ட சிறப்பு முகாம், 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்தது. காலை, 9:30 முதல் மாலை, 5:30 மணி வரை நடைபெற்றது.அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க படிவம் - 6, பெயர் நீக்கத்துக்கு படிவம் - 7, வாக்காளர் அட்டையில் திருத்தத்துக்கு படிவம் - 8, தொகுதிக்குள் முகவரி மாற்றத்துக்கு படிவம் - 8ஏ, பூர்த்தி செய்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதியில் இரண்டு நாள் சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க - 3,676; பெயர் நீக்கம் - 2,266; திருத்தம் செய்ய - 801; தொகுதிக்குள் முகவரி மாற்றம் - 619, என மொத்தம், 7,362 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.வால்பாறை தொகுதியில், பெயர் சேர்க்க - 2,806; பெயர் நீக்கம் - 3,956; திருத்தம் செய்ய - 529; தொகுதிக்குள் முகவரி மாற்றம் - 236, என மொத்தம், 7,581 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் நடந்த சிறப்பு முகாம்களில், 14,943 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நடக்கிறது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X