பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

Added : டிச 16, 2020
Share
Advertisement
உடுமலை:கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் இயங்கி வந்த அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும், என ரயில்வே பயணிகள் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் முதல் திண்டுக்கல் வரையிலான, ரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம், 'ஆன்லைன்' வழியாக நடந்தது. மதுரை மண்டல ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர்

உடுமலை:கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில் இயங்கி வந்த அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும், என ரயில்வே பயணிகள் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.மேட்டுப்பாளையம் முதல் திண்டுக்கல் வரையிலான, ரயில் பயணிகள் மற்றும் உபயோகிப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம், 'ஆன்லைன்' வழியாக நடந்தது. மதுரை மண்டல ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனை கமிட்டி உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.சேலம் மண்டலம் கமிட்டி உறுப்பினர் ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கந்தசாமி, மோகன் மற்றும் பொள்ளாச்சி, உடுமலை, போத்தனுார், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலுள்ள ரயில் பயணிகள் நலச்சங்கம், திண்டுக்கல், கிணத்துக்கடவு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், 21 கி.மீ.,க்குள், மூன்று ரயில்வே கோட்டங்களின் கீழ் வருவதால், திட்டங்களை செயல்படுத்தும் போது, மூன்று இடங்களில் அனுமதி பெற வேண்டியுள்ளது. எனவே, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு (145/5) வரையிலான தடத்தை, முன்பு இருந்தது போல், மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.போத்தனுார், மேட்டுப்பாளையம் ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். போத்தனுார் - தாம்பரம், திருநெல்வேலி, திருச்செந்துார் வரை புதிய ரயில் இயக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் ரயில்வே வழித்தடத்தில், மீட்டர்கேஜ் பாதையில் இயங்கிய அனைத்து ரயில்களையும், மீண்டும் இயக்கவும், தொழில் துறையினர் வசதிக்காக சரக்கு ரயில் இயக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X