பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி வினியோகத்துக்கு தயார்

Added : டிச 16, 2020
Share
Advertisement
புதுடில்லி:''கொரோன தடுப்பூசி மருந்தை நாடு முழுதும் வினியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன'' என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறினார்.மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து டில்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ்

புதுடில்லி:''கொரோன தடுப்பூசி மருந்தை நாடு முழுதும் வினியோகம் செய்வதற்கான கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன'' என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் கூறினார்.

மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்க மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதுகுறித்து டில்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் நேற்று கூறியதாவது:கொரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக குளிர் வெப்பநிலையில் கொண்டு சேர்க்க மாநில அரசுகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக குறிப்பிட்ட வெப்பநிலையை தொடர்ந்து பராமரிக்கும் 29 ஆயிரம் குளிர்சாதன கட்டமைப்புகள், 240 நடமாடும் 'கூலர்'கள், 70 நடமாடும் 'பிரீசர்'கள், 45 ஆயிரம் குளிர்சாதன பெட்டிகள், 41 ஆயிரம்'டீப் பிரீசர்'கள் மற்றும் மின்வசதி இல்லாத பகுதிகளுக்காக சூரிய ஒளியில் இயங்கும் 300 குளிர்சாதன பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

இவை ஏற்கனவே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் சில உபகரணங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. தடுப்பூசி வினியோகம் தொடர்பான கூட்டங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடத்தி முடித்துள்ளன. இந்த பணிகளில் பங்கேற்போருக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X