தேனி:முன்விரோதத்தில் மூதாட்டி ராமாயி 65, என்பவரை கொலை செய்த வழக்கில் தந்தை மொக்கை 60, மகன்கள் உதயக்குமார் 31, முத்து 38, ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி தெற்குத்தெரு தந்தை, மகன்களான இவர்கள் அதேதெருவில் வசித்த ராமாயி என்பவரின் மகளை கிண்டல் செய்தனர். அதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மூவரும் ராமாயியை அரிவாளால் வெட்டியதில் இறந்தார். ராமாயி மருமகள் லட்சுமியை தலையில் வெட்டியதில் காயமடைந்தார். தேவதானப்பட்டி போலீசார் மூவரையும் கைது
செய்தனர்.
வழக்கு தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வெங்கடேசன், தந்தை மகன்களுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம், ராமாயின் மருமகளை கொலை முயற்சி
செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறைதண்டனை , தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மூவரும் தலா ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.60 ஆயிரத்தை காயமடைந்த லட்சுமிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி ஆஜரானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE