டெல் அவிவ்:இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த, 252 யூதர்கள், மேற்காசிய நாடான இஸ்ரேலில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம்
கொடுப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
யூதர்களை பெரும்பான்மையினராகக் கொண்டது, மேற்காசிய நாடான இஸ்ரேல். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர், மிசோரமைச் சேர்ந்த, 252 யூதர்கள், அடைக்கலம் கேட்டு, இஸ்ரேலை தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவர்களை அகதிகளாக ஏற்க, இஸ்ரேல் அரசு அனுமதி அளித்தது. அதன்படி, இஸ்ரேலின்
பென்குரியான் விமான நிலையத்தை இவர்கள் நேற்று அடைந்தனர். இதில், 50 குடும்பங்கள், 24 தனிநபர்கள், 2 வயதுக்குட்பட்ட, நான்கு குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட, 19 பேர் அடங்குவர்.வடகிழக்கு மாநிலங்களில், பினெய் மெனாஷே இனத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். கடந்த, 2003ல் இருந்து, இதுவரை, 2,437 பேர், இஸ்ரேலில் தஞ்சமடைந்துள்ளதாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட, உலகின் பல்வேறு நாடுகளில் தஞ்சம்
அடைந்ததாகவும் கூறப்படுகிறது.பினெய் மெனாஷே இனத்தவரை,யூதர்களாக அங்கீகரிப்பதாக, இஸ்ரேலைச் சேர்ந்த யூதத் தலைவர்கள் அறிவித்தனர். அதன்பின், இந்த இன மக்கள்,
இஸ்ரேலுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.
தற்காலிகமாக, இஸ்ரேலின் நெதான்யாவுக்கு அருகே உள்ள முகாம்களில் இவர்கள்
தங்கியிருப்பர். யூத மத வழக்கங்கள் அங்கு கற்பிக்கப்படும். அதன்பின், வடக்குப் பகுதியில் இவர்கள் குடியமர்த்தப்பட உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE