வாஷிங்டன்:அமெரிக்க
அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் துணை
அதிபர் ஜோ பைடனின் வெற்றியை, 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும், மாகாண
பிரதிநிதிகள் அமைப்பு உறுதி செய்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல்,
நவ., 3ல் நடந்தது. அதில், ஜோ பைடன் வென்றதாக
அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதை ஏற்க மறுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர்
டொனால்டு டிரம்ப் பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்.
அமெரிக்க
தேர்தல் நடைமுறையின்படி, 'பாப்புலர் வோட்' எனப்படும், மக்கள்
அளிக்கும்
ஓட்டுகளைப் பெறுவதால் மட்டுமே ஒருவர் அதிபராக
முடியாது. மக்கள் அளிக்கும் ஓட்டுகள், அந்தந்த மாகாணத்தில்
நிர்ணயிக்கப்பட்டுள்ள, மாகாண பிரதிநிதிகளுக்கு கிடைக்கும்.
அவ்வாறு, 538 பிரதிநிதிகள் அடங்கிய, 'எலக்டோரல் காலேஜ்'
ஓட்டுகளே, அதிபர் யார் என்பதை
நிர்ணயிக்கும். அதற்கு, 270
ஓட்டுகளைப் பெறவேண்டும்.
நேற்று முன்தினம் நடந்த,
எலக்டோரல் காலேஜ் ஓட்டெடுப்பில், ஜோ பைடனுக்கு, 306 ஓட்டுகள்
கிடைத்தன. இதையடுத்து, அவர் அதிபராக பதவியேற்பது உறுதியாகி
உள்ளது.இந்தியாவை
பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக
பதவியேற்க உள்ளார். வரும், ஜன., 20ல், இருவரும் பதவியேற்க
உள்ளனர்.
இதுகுறித்து, ஜோ பைடன் கூறியதாவது:நம் நாட்டில்
ஜனநாயகம் என்ற சுடர் தொடர்ந்து ஜொலித்து வருகிறது; அதை எந்த
சக்தியாலும் அழிக்க முடியாது. அது, 'கொரோனா' போன்ற பெருந்தொற்றாக
இருந்தாலும் சரி; அதிகார துஷ்பிரயோகமாக இருந்தாலும் சரி.
ஜனநாயகத்தின்
வெற்றிக்கு, அதன் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையே காரணம்.
தற்போது நாம் புதிய துவக்கத்தை துவக்க உள்ளோம். காயங்களுக்கு மருந்து
கிடைக்க உள்ளது.
அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
இந்தத்
தேர்தலில், 8.1 கோடி மக்கள் எனக்கும், கமலா ஹாரிசுக்கும்
ஓட்டளித்துள்ளனர். அமெரிக்க வரலாற்றில், இது புதிய சாதனை.நம்
அரசியல் சாசனம், ஜனநாயகம், மக்கள் மீது
நம்பிக்கை இல்லாமல்,
தற்போதைய தேர்தல் முடிவுகளை ஏற்காமல், டிரம்ப் பல வழக்குகளை
தொடர்ந்தார்.அவரது வழக்குகளை, 80 நீதிபதிகள், நாடு முழுதும் விசாரித்துள்ளனர். அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாம்
அனைவரும் இணைந்து, நாட்டின் நலனுக்காக செயல்படுவோம்.
ஜனநாயகத்துக்கு
எப்போதும் வெற்றி கிடைப்பதை உறுதி செய்வோம்.இவ்வாறு அவர்பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE