அடையாறு: அடையாறில், 8.88 கோடி ரூபாயில், விளையாட்டு மைதானம் சீரமைப்பு மற்றும் புதிய பூங்கா அமைக்கும் பணி துவங்கியது.
சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், 175வது வார்டு, கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகில், அடையாறு ஆற்றை ஒட்டி, விளையாட்டு மைதானம் மற்றும் காலி இடம் உள்ளது. இவை, 1.97 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது.விளையாட்டு மைதானம், சாலை மட்டத்தில் இருந்து, 10 அடி பள்ளத்தில் உள்ளது. இந்த மைதானத்தை, சாலை மட்டத்தில் உயர்த்தி, அருகில் உள்ள காலி இடத்தில், பூங்கா, நடைபாதை அமைக்க, மாநகராட்சி, 8.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இதற்கான பணி துவங்கி உள்ளது. மைதானத்தில், மண் கொட்டி சமப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதில், விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, சிமென்ட் இருக்கை, பூச்செடிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.ஓராண்டிற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE