பொது செய்தி

தமிழ்நாடு

மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு

Added : டிச 16, 2020
Share
Advertisement
சென்னை : மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, மின் சிக்கனம் குறித்து, வாரியம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில், ஆண்டுதோறும், டிச., 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், மின் வாரியம் சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை

சென்னை : மின் சிக்கன வாரத்தை முன்னிட்டு, மின் சிக்கனம் குறித்து, வாரியம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில், ஆண்டுதோறும், டிச., 14ம் தேதி முதல், 20ம் தேதி வரை, மின் சிக்கன விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில், மின் வாரியம் சார்பில், பள்ளி, கல்லுாரிகளில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை போட்டிகளும், பொது மக்கள் கூடும் இடங்களில், மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்கும் மனித சங்கிலி, பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

அந்த வகையில், இந்தாண்டு, மின் சிக்கன வாரம், இந்த வாரம் கொண்டாடப்படுகிறது. இதற்காக, மின் சிக்கனம் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, மின் வாரியம் சார்பில், அரசு அலுவலகங்கள், மின் கட்டண மையங்களில், மின் சிக்கனத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு, 'போஸ்டர்'கள் ஒட்டப்பட்டு வருகின்றன.மேலும், துண்டறிக்கை வாயிலாகவும், பொது மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X