சென்னை : விபத்தால் மாற்றுத்திறனாளியாக மாறிய, ஓட்டல் மாஸ்டருக்கு, 15.27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் மோகன், 42; ஓட்டல் மாஸ்டர். இவர், 2010 நவம்பரில், செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றத்திற்கு, பைக்கில் பின்புறம் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நெமிலி அருகே சென்றபோது, வேகமாக வந்த லாரி, பைக் மீது மோதியதில், காயமடைந்த மோகன் மாற்றுத்திறனாளியானார்.இந்நிலையில், மாற்றுத்திறனாளியான தனக்கு, 27 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், மோகன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை, நீதிபதி வி.சுதா முன் நடந்தது. விசாரணையில், மனுதாரருக்கு, 80 சதவீதம் நிரந்தர இயலாமை ஏற்பட்டுள்ளது. இதற்கு, லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு, 15.27 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE