அன்னூர்:அன்னூர் டாஸ்மாக் கடை கலெக்டர் உத்தரவால் மூடப்பட்டது.அன்னுாரில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குளத்தின் மேற்குப் பகுதியில், டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், டாஸ்மாக் கடை அருகே, கோவில், பள்ளிக்கூடம், குடியிருப்பு, விவசாய நிலங்கள் உள்ளன. எனவே, இக்கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், இரு மாதங்களுக்கு முன் பிறப்பித்த உத்தரவில், அந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றும்படி தெரிவித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, கோவை கலெக்டர் ராஜாமணி, கடந்த மாதம் டாஸ்மாக் மேலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், அந்த டாஸ்மாக் கடையை மூடும் படியும் வேறிடத்துக்கு மாற்றும் படியும் தெரிவித்தார். கலெக்டர் அறிவுறுத்தி, ஒரு மாதம் ஆகியும், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படவில்லை.இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை மூடும்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார். இதையடுத்து கடை மூடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE