பொது செய்தி

தமிழ்நாடு

தயாராகிறது 'மினி கிளினிக்' மகிழ்ச்சியில் கிராம மக்கள்

Added : டிச 16, 2020
Share
Advertisement
கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இரண்டு மினி கிளினிக்குகள் வரும், 18ம் தேதி முதல் செயல்பட உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு, அந்தப் பகுதியிலேயே சிகிச்சை அளிக்க கூடிய அளவுக்கு, தமிழகத்தில், 'அம்மா' மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு டாக்டர், ஒரு

கோவில்பாளையம்:எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இரண்டு மினி கிளினிக்குகள் வரும், 18ம் தேதி முதல் செயல்பட உள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற உபாதைகளுக்கு, அந்தப் பகுதியிலேயே சிகிச்சை அளிக்க கூடிய அளவுக்கு, தமிழகத்தில், 'அம்மா' மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு உதவியாளர் இருப்பர். எஸ்.எஸ்., குளம் ஒன்றியத்தில், வெள்ளானைப்பட்டி மற்றும் வெள்ளமடையில், மினி கிளினிக்குகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வெள்ளமடையில் துணை சுகாதார நிலையத்தில் கிளினிக் அமைக்கப்பட்டு உள்ளது. வெள்ளானைப்பட்டியில் தற்காலிக கட்டடத்தில் கிளினிக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அருகில், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை இல்லாத நிலையில், வெள்ளானைப்பட்டி மற்றும் வெள்ளமடை ஊராட்சி மக்கள் இந்த மினி கிளினிக்குகளால் பயன்பெறுவர். 'இந்த இரு கிளினிக்குகளும் வரும், 18ம் தேதி முதல் செயல்படும்' என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.அன்னுார் ஒன்றியத்தில், பசூர், குப்பேபாளையம், ருத்திரியம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கணுவக்கரை ஆகிய ஐந்து ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X