பொது செய்தி

தமிழ்நாடு

'முகக்கவசம் அணிவதில் மக்கள் மெத்தனம்'

Added : டிச 16, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:''கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய் என தெரிந்தும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், மெத்தனமாக வெளியில் நடமாடுகின்றனர். எனவே, முகக்கவசங்களை அவசியம் அணிந்து கொண்டு வெளியே வர வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மேல்பவானி உப வடிநிலப்பகுதி விவசாயிகளுக்கான, இடைமுக பணிமனை

மேட்டுப்பாளையம்:''கொரோனா ஒரு உயிர்க்கொல்லி நோய் என தெரிந்தும், பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல், மெத்தனமாக வெளியில் நடமாடுகின்றனர். எனவே, முகக்கவசங்களை அவசியம் அணிந்து கொண்டு வெளியே வர வேண்டும்,'' என, கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மேல்பவானி உப வடிநிலப்பகுதி விவசாயிகளுக்கான, இடைமுக பணிமனை கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்த கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, நிருபர்களிடம் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் கொரோனா வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு மிகப்பெரிய அளவில் தளர்வு செய்துள்ள நிலையில், கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பது மிக அவசியம் என, அரசு வலியுறுத்தி வருகிறது.ஆனால், சமீப காலமாக பொதுமக்கள், முகக்கவசம் அணிவதை தவிர்க்கும் விதமாக, வெளியே நடமாடுகின்றனர். இது முற்றிலும் தவறு. கொரோனா ஆபத்தை விளைவிக்கக்கூடிய உயிர்கொல்லி நோய். மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் வெளியே வரும் போது, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சளி மற்றும் காய்ச்சல் இருப்பின், உடனடியாக, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற வேண்டும்.கல்லுாரிகள் திறப்பில், அரசு பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளை அறிவித்துள்ளது. வகுப்புகளிலும், விடுதிகளிலும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை, கல்லுாரி நிர்வாகம் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X