பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

Added : டிச 16, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டது.துடியலுாரில் உள்ள சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை கொண்டாடியது. ஆண்டுதோறும் ஜன., மாதம், வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சாலை பாதுகாப்பு

பெ.நா.பாளையம்:துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா கொண்டாடப்பட்டது.துடியலுாரில் உள்ள சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் துடியலுார் போலீஸ் ஸ்டேஷன் ஆகியவை இணைந்து, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை கொண்டாடியது. ஆண்டுதோறும் ஜன., மாதம், வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படும். நடப்பாண்டு டிசம்பர் மாதமே கொண்டாடப்படுகிறது.துடியலுார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் நடராஜன் துவக்கி வைத்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜன் முன்னிலை வகித்தார். விழாவையொட்டி, துடியலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம், சாலையில் பாதுகாப்பாக செல்வது மற்றும் ஹெல்மெட் அணிவது, காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது ஆகியவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் முகப்பு விளக்குகளில் இருந்து வரும் வெளிச்சம் எதிரே வரும் நபர்களின், கண்களை கூசாமல் இருக்க கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. போக்குவரத்து போலீசார் உட்பட திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X