உடுமலை:சமூக வலைதளங்களில், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் குறித்து அவதுாறு பரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குறித்து, சமூக வலைதளங்களில், அவதுாறு பரப்பும் வகையிலும் தவறான தகவல் பரப்பியதாக, எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பணியாற்றி வரும், ராமமூர்த்தி, உடுமலை போலீசில் புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில், அவதுாறு பரப்புவது, கொலை மிரட்டல் மற்றும் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோத்தம்பட்டியை சேர்ந்த பாலகுமார்,35, என்பவரை கைது செய்தனர்.உடுமலை ஜே.எம்.,1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE