பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எல்லாம் எதுக்குன்னு தெரியும்!

Updated : டிச 16, 2020 | Added : டிச 16, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, 'இட ஒதுக்கீடு' என்ற பெயரில், எத்தனையோ கொடுமைகள், தமிழகத்தில் நடக்கின்றன. உச்ச நீதிமன்றம், 'இட ஒதுக்கீட்டை, 50 சதவீதத்திற்கு மேல் அமல்படுத்த கூடாது' என, தெளிவாகச் கூறியது. ஆனால், அதை
இட ஒதுக்கீடு, கருணாநிதி, ஜெயலலிதா


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு, 'இட ஒதுக்கீடு' என்ற பெயரில், எத்தனையோ கொடுமைகள், தமிழகத்தில் நடக்கின்றன. உச்ச நீதிமன்றம், 'இட ஒதுக்கீட்டை, 50 சதவீதத்திற்கு மேல் அமல்படுத்த கூடாது' என, தெளிவாகச் கூறியது. ஆனால், அதை லட்சியம் செய்யாமல், இட ஒதுக்கீட்டை, 69 சதவீதமாக உயர்த்தி, பெரும் பாதகம் செய்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதனால் அவருக்கு, 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வேறு கிடைத்தது.

பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த கருணாநிதி ஆட்சியில், இட ஒதுக்கீடு, 35 சதவீதம் மட்டுமே இருந்தது. உயர் வகுப்பில் பிறந்த, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், இது, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பிராமணர் குலத்தில் பிறந்த, ஜெயலலிதா ஆட்சியில், 69 சதவீதமாக உயர்த்தப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய, உயர் வகுப்பில் பிறந்தோருக்கு, 'அல்வா' கொடுக்கப்பட்டது. 'இது போதாது; வன்னியருக்கு, தனியாக, 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தே ஆக வேண்டும்' என்கிறார், பா.ம.க., நிறுவனர், டாக்டர் ராமதாஸ். தேர்தல் நெருங்கும் காலத்தில் போராட்டம் நடத்தி, கலவரத்தை துாண்டுகிறார்.


latest tamil news


ராமதாசும், அவரது மகன் அன்புமணியும், இட ஒதுக்கீட்டால் தான், மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தனரா அல்லது 'மெரிட்டில்' இடம் கிடைத்ததா? ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு அளித்தால், 100 சதவீதத்தை தாண்டிப் போய்விடுமே. அப்போது என்ன செய்வது என்பதை, ராமதாஸ் விளக்க வேண்டும். இதெல்லாம் நடைமுறைக்கு நிச்சயம் ஒத்து வராது என்பது, ராமதாசுக்கு தெரியும்.

ஜாதி கலவரத்தை உருவாக்கவும், தேர்தல் கூட்டணியில் அதிக, 'சீட்' பெறவும் நடத்தப்படுகிற போராட்டம் என்பது, மக்களுக்கு தெரியும். இட ஒதுக்கீடு என்ற சாபக்கேடு, தமிழகத்தில் கலவரத்தைத் துாண்டி, எத்தனை உயிர்களை பலி வாங்கப் போகிறதோ?

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
17-டிச-202003:57:09 IST Report Abuse
SaiBaba இட ஒதுக்கீடு இருந்து விட்டுப்போகட்டும். மற்ற சாதிக்காரர்கள் படிக்க வேலை பார்க்க என்று இட ஒதுக்கீடு இல்லாமல் வேறு கல்லூரிகள், அலுவலகங்கள் என்று ஏற்பாடு செய்யுங்கள். அவர்களும் பிழைக்க வேண்டாமா? இந்த நாட்டில் பிறந்து விட்டு அவர்களைக் குழி தோண்டி புதைக்க எண்ணமா?
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-டிச-202003:53:59 IST Report Abuse
SaiBaba கட்டுரையாளரின் கருத்து அருமை.
Rate this:
Cancel
SaiBaba - Chennai,இந்தியா
17-டிச-202003:53:37 IST Report Abuse
SaiBaba மூளை இருந்தாலும் நீ இந்த ஜாதியில் பிறந்ததால் படிக்க கூடாது என்று சொல்வது தான் இட ஒதுக்கீடு. இதை வெளி நாட்டுக்காரனுக்கு புரிய வைத்துப் பாருங்கள். காரித்துப்புவான். உலகத்தோடு இந்த விஷயங்களில் ஒத்துப்போக முடியாமல் அப்புறம் என்ன இட உலக மயமாக்கல்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X