திருமங்கலம் : கப்பலுாரில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிட்கோவில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின் குப்பையை சேகரிக்க ஆங்காங்கே குப்பை தொட்டிகள் உள்ளன.
ஆனால் பல நாட்களாக குப்பை அகற்றப்படாமல் இருப்பதால் குப்பை தொட்டிகளுக்கு வெளியிலும் குப்பையை கொட்டி செல்கின்றனர்.மேலும் சமீபத்தில் பெய்த மழையால் குப்பைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் 2வது மிகப்பெரிய தொழிற்பேட்டையை குப்பை இல்லாததாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE