பழநி : பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்கள், பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 'மங்கை வள்ளி கும்மிக் குழு' 18 பகுதிகளில் உள்ளது.இதில் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்த ஒரு குழு பயிற்சி மற்றும் அரங்கேற்றம் முடித்துள்ளது. அக்குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பழநி முருகனை தரிசிக்க வந்தனர். அவர்கள் மலைக்கோயில் பாத விநாயகர் கோயில் முன்பு வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர். ஆட்டத்திற்கு தகுந்தவாறு பாடலும் பாடினர். இதை கண்ட பக்தர்களும் அங்கு இருந்த வியாபாரிகளும் வள்ளிக்கும்மி குழுவின் ஆட்டத்தை ரசித்தனர்.
குழு ஆசிரியர் சண்முக சுந்தரம் கூறியதாவது: பத்து ஆண்டுகளாக இந்த கலையை கற்று கொடுத்து வருகிறேன். ஒவ்வொரு குழுவின் அரங்கேற்றம் முடிந்ததும் பழநியாண்டவரை தரிசிக்க வருவோம். ஊரடங்கு காலத்தில் வரமுடியவில்லை. இதுவரை 5க்கும் மேற்பட்ட குழுவினரை அரங்கேற்றம் முடித்து அழைத்து வந்துள்ளேன்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE