அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்னை தெரசா இருந்திருந்தால் முதல்வரை பாராட்டியிருப்பார்

Added : டிச 16, 2020
Share
Advertisement
திருமங்கலம், : ''அன்னை தெரசா இருந்திருந்தால் மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வர் பழனிசாமியை பாராட்டியிருப்பார்,'' என, திருமங்கலம் கப்பலுாரில் நடந்த ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் அமைச்சர் உதயகுமார் பேசினார். அவர் பேசியதாவது: நோயற்ற வாழ்வை மக்களுக்கு உருவாக்கிட கடைக்கோடியில் இருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க

திருமங்கலம், : ''அன்னை தெரசா இருந்திருந்தால் மினி கிளினிக் திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதல்வர் பழனிசாமியை பாராட்டியிருப்பார்,'' என, திருமங்கலம் கப்பலுாரில் நடந்த ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் அமைச்சர் உதயகுமார் பேசினார்.

அவர் பேசியதாவது: நோயற்ற வாழ்வை மக்களுக்கு உருவாக்கிட கடைக்கோடியில் இருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க தமிழகம் முழுவதும் 2000 இடங்களில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் துவக்கி வைத்துள்ளார். தொழு மற்றும் காச நோயாளிகளுக்கு இலவசமாக பல மருத்துவமனைகளை உருவாக்கிய அன்னை தெரசா முதல்வர் ஜெயலலிதா தொட்டில் குழந்தைகள் திட்டத்தை கொண்டு வந்ததற்காக அவரை தேடி வந்து பாராட்டினார். அவர் தற்போது இருந்திருந்தால் மினி கிளினிக் திட்டத்திற்காக முதல்வரை பாராட்டியிருப்பார்.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9726 டாக்டர்கள், 15,659 செவிலியர்கள் உட்பட 31,868 மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களும் மருத்துவம் படிக்க முதல்வர் 7.5 உள்ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளார், என்றார்.ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட செயலாளர் தமிழழகன், மாவட்ட கவுன்சிலர் அய்யப்பன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம், ஐ.டி., அணி மாவட்ட செயலாளர் சிங்கராஜபாண்டியன், மீனவர் அணி செயலாளர் சரவணன், இளைஞர் அணி செயலாளர் காசிமாயன், துணை செயலாளர் வரதன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X