ரூ.12 லட்சம் மோசடிமதுரை: தேனி உச்சம்பட்டி பிரேமலதா 45. இவரது மகனுக்கு பி.எஸ்.என்.எல்., லில் வேலை வாங்கித்தருவதாக மதுரை பனையூர் அன்பரசன் மூலம் அறிமுகமான அரிட்டாபட்டி திருமால்அழகு, சின்ன அடைக்கண் என்ற சேகர் ஆகியோர் ரூ.12 லட்சம் பெற்றனர். வேலையில் சேர ஆணையை வழங்கினர். பணியில் சேரமுயன்றபோது போலி ஆணை எனத்தெரிந்தது. மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றவாளிகள் மீது வழக்குமதுரை: மேலஅனுப்பானடி மாருதிநகர் தர்மராஜ், அண்ணாநகர் முந்திரிதோப்பு முருகன், அருப்புக்கோட்டை பாலையம்பட்டி ஜோதிராஜ். இவர்கள் மீதான வழக்கு விசாரணை மதுரை விரைவு நீதிமன்றத்தில் நடக்கிறது. இவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்ற எழுத்தர் சத்தியவதி புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 கிலோ கஞ்சாவுடன் கைது மதுரை: கூடல்புதுார் பகுதியில் 27 கிலோ கஞ்சாவுடன் யாகப்பா நகர் விக்னேஷ் 22, அய்யர் பங்களா இ.பி. காலனி வின்சென்ட் செல்வராஜ் ஆகியோரை இன்ஸ்பெக்டர் கதிர்வேல் கைது செய்தார்.
மணல் திருடியவர் கைதுதிருமங்கலம் : பன்னீர்குண்டு கொடிவைரன் மகன் சுரேஷ் 32, டிராக்டரில் மண் எடுத்து சென்றார். சிந்துபட்டி எஸ்.ஐ., குபேந்திரன் மற்றும் போலீசார் விசாரித்த போது அனுமதியின்றி மணல் திருடி செல்வது தெரிந்தது. டிராக்டரை பறிமுதல் செய்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
அ.ம.மு.க.,வினர் மீது வழக்கு திருமங்கலம் : அ.ம.மு.க.,வுக்கு வரும் தேர்தலுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. திருமங்கலத்தில் நகர் செயலாளர் வைரவன் தலைமையில் 25 பேர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.கொரோனா தடையுத்தரவு விதிகளை கடைபிடிக்காததற்காக அவர்கள் மீது எஸ்.ஐ.,சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார்.பூட்டை உடைத்து பணம் திருட்டுதிருமங்கலம் : புதுப்பட்டி கணேஷ் பெருமாள் மனைவி நாகவனிதா 39. இவர் உறவினர் இல்ல திருமணத்திற்காக பொள்ளாச்சி சென்றார். நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது குறித்து அருகில் இருந்தவர்கள் நாகவனிதாவிடம் தெரிவித்தனர். உள்ளே சென்று பார்த்த போது ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போயிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.மலை மீது தீபம்; 2 பேர் கைதுதிருப்பரங்குன்றம் : மலை உச்சி தீபத்துாணில் டிச., 13 அதிகாலை இருவர் தீபம் ஏற்றினர். கோயில் நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. இதில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் செல்வக்குமார் 35, அரசுபாண்டியை 35, போலீசார் கைது செய்தனர்.ஆடுகள் திருடிய டிரைவர் கைதுபேரையூர் : டி.மீனாட்சிபுரம் மாரியப்பன் ஆடு வளர்த்து வருகிறார். இவரது 3 ஆடுகளை கோடங்கிநாயக்கன்பட்டி வேன் டிரைவர் அஜித் 24, திருடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.காங்., பேரணி; 300 பேர் மீது வழக்குமேலுார் : காங்., நகர் கமிட்டி சார்பில் ஏர் கலப்பை பேரணி வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்றது. அனுமதியின்றி பேரணி நடத்தியதாக 300 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE