திண்டுக்கல் : தி.மு.க.,வின் 'தமிழகம் மீட்போம்' திண்டுக்கல் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
சென்னையில் இருந்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.திண்டுக்கல் மாவட்டத்தில் 151இடங்களில் காணொலி கூட்டம் வாயிலாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல்லில் வேலுச்சாமி எம்.பி., ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் காந்திராஜன், நகரசெயலாளர் ராஜப்பா, அவைத் தலைவர் பஷீர் அகமது, துணைச் செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜா பங்கேற்றனர்.மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி பேசுகையில், ''பிரதமர் என்ன சொல்கிறாரோ முதல்வர் பழனிச்சாமி அதைச் செய்கிறார்.
மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் ஒரே தலைவர் ஸ்டாலின்தான். அவரை 2021 ல் முதல்வராக்க மக்கள் காத்திருக்கின்றனர்'' என்றார்.கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் பேசுகையில், ''எத்தனை கூட்டணி வந்தாலும், எத்தனை வியூகங்களை வகுத்தாலும் தி.மு.க., ஆட்சி அமைவது உறுதி.கொரோனா காலத்தில் மக்களுக்காக உழைத்தது தி.மு.க.,தான். திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்'' என்றார்.
நிலக்கோட்டை:நிலக்கோட்டை தொகுதியில் 17 இடங்களில் காணொலி காட்சி பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டி, நகரச் செயலாளர் கதிரேசன் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வத்தலக்குண்டில் ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர்கள் சின்னதுரை, தங்கராஜ், அருண்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE