அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேடசந்துாரில் போட்டி ஆயத்தமாகி வரும் காங்.,

Added : டிச 16, 2020
Share
Advertisement
வடமதுரை : வரும் தேர்தலில் வேடசந்துார் தொகுதியில் போட்டியிட தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி நிர்வாகிகள் ஆயத்தமாகி வருகின்றனர். 2006 முதல் நடந்த 3 சட்டசபை தேர்தல்களிலும் வேடசந்துார் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்.,போட்டியிட்டது. ஒரு முறை வெற்றி, இரு முறை தோல்வி கிடைத்தது. தேசிய அளவில் காங்., பலமிழந்த நிலையில் வரும் தேர்தலிலும் காங்., தனித்து போட்டியிட

வடமதுரை : வரும் தேர்தலில் வேடசந்துார் தொகுதியில் போட்டியிட தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சி நிர்வாகிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

2006 முதல் நடந்த 3 சட்டசபை தேர்தல்களிலும் வேடசந்துார் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்.,போட்டியிட்டது. ஒரு முறை வெற்றி, இரு முறை தோல்வி கிடைத்தது. தேசிய அளவில் காங்., பலமிழந்த நிலையில் வரும் தேர்தலிலும் காங்., தனித்து போட்டியிட வாய்ப்பில்லை.தி.மு.க., கூட்டணியில் உறுதியானால், திண்டுக்கல் மாவட்டத்தில் எப்படியும் ஒரு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்.,நிர்வாகிகள் உள்ளனர்.

கடந்த முறை தி.மு.க., வென்ற நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்துார், பழநி தொகுதிகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, அவற்றை தவிர்த்து வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாகவேடசந்துாரே சரியான தேர்வு என கட்சியினர் கருதுகின்றனர்.இதனை கருத்தில்கொண்டு, தேர்தல் செலவுக்கு தயங்காத 2 வர்த்தக பிரமுகர்கள் வேடசந்துார் தொகுதியை எதிர்பார்த்து காங்.,கில் சேர்ந்துள்ளனர்.இவர்களுடன் முன்னாள் எம்.எல்.ஏ., என மூவரும் மேலிட பரிந்துரைக்காக நகர்வுகளை முன்னெடுத்துள்ளனர். போட்டிக்கு தயாராக காங்., நிர்வாகிகள் கூட்டங்கள், நிர்வாகிகள் மாற்றம் போன்ற முயற்சிகளும்நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X