வடமதுரை : பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் நோயாளிகள், பணியாளர்கள் அச்சத்துடன் இருக்கின்றனர்.
வடமதுரை ஒன்றியம் பிலாத்தில் வறட்டாறு அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. நுழைவாயில் பகுதியில் மட்டுமே சுவர் அமைந்துள்ள நிலையில் பக்கவாட்டிலும் பின்பகுதியிலும் சுற்றுச்சுவர் இல்லாததால் பலவித பிரச்னைகளை இங்குள்ளவர்கள் எதிர்கொள்கின்றனர். பாதுகாப்பு இல்லாததால் நோயாளிகள், பணியாளர்கள் யாரும் இங்கு வரதயக்கம் காட்டுகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிலாத்து எஸ்.சரவணன் கூறியதாவது: ஓடைக்குள் புதர்கள் அதிகம் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் அடிக்கடி வளாகத்திற்குள் வந்துவிடுகின்றன. இதனால் இங்கு பிரசவத்திற்காக தங்கும் நோயாளிகள், உதவியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைவரும் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக கருதுகின்றனர். கிராமத்தில் கால்நடைகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் சுற்றுச்சுவர் இல்லாததால் வளாகத்திற்குள் காலி இடங்களில் மரம், பூச்செடிகள் வளர்க்க வாய்ப்பின்றி உள்ளது. சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE